இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையில் அத்துமீறிய  பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது .காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  

அதேநேரத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்கொத்தி பாம்பாக இருந்தது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் கூட்டு சதிகளை முறியடித்து வருகின்றனர் .  இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்குவார் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 8ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர் .  அவர்களுடன்  துப்பாக்கிச் சூடு நடத்தியபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர் . 

அப்போது சதியை முறியடிக்க தயார் நிலையில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ  வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்தனர் இச்சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார் மேலும் 3 பேர் காயமடைந்தனர் . இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மெந்தார் என்ற இடத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர்.     இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதி கிராமமான மெந்தர் உள்ளிட்ட எல்லைப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக இந்திய பாகிஸ்தான் படைகள் இடையே மோதல் நடந்து வருகிறது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .