Asianet News TamilAsianet News Tamil

"எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீனா... ஓட ஓட விரட்டியடித்த இந்திய ராணுவம்" - தொடரும் பதற்றம்!!

indian army drove away china in sikkim border
indian army drove away china in sikkim border
Author
First Published Aug 16, 2017, 10:36 AM IST


Doklam  எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை தடுத்து நிறுத்திய  இந்திய ராணுவம் அவர்களை ஓட,ஓட விரட்டியடித்தது. அப்போது நடைபெற்ற கல்வீச்சு சண்டையில் இருதரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. 

இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையான Doklam பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்துள்ளதால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், 71வது சுதத்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவின் Ladakh எல்லைப் பகுதியில்  இரண்டு இடங்களில் சீன ராணுவத்தினர் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். 

Finger-4 மற்றும் Finger-5ஆகிய இடங்களில் சீன ராணுவத்தினர் நேற்று காலைஊடுருவ முயன்றதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதனைத் தொடர்ந்து, Pangong ஏரியின் வடக்கு கரை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். 

indian army drove away china in sikkim border

அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்திய போது இருதரப்பிற்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றதாகவும் இதில் இருதரப்பிலும் சில வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் பின்னர் சீன வீரர்கள் பின்வாங்கிச் சென்றதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Doklam பிரச்சனை நீடித்து வரும் நிலையில் சீனா தொடர்ந்து இந்திய ராணுவத்தை சீண்டிவருகிறது. நாட்டின் கிழக்கு எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து அதன் நிலைகளை உறுதிப்படுத்தி வருவதுடன் இந்திய எல்லைக்குள்ளும் ஊடுருவ முயற்சித்து வருவதால் இப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios