2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்... உறுதி அளித்தார் பிரதமர் மோடி!!
2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது சுமார் 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்துள்ளார். கடந்த 2001ல் குஜராத்தில் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சர் பகுதியில் இரண்டு நினைவகங்களை மக்களுக்கு பிரதமர் மோடி அர்பணித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை ‘தனிப்பட்டரீதியில்’ ராகுல் விமர்சித்ததை யாரும் விரும்பவில்லை: குலாம் நபி ஆசாத் ஓபன் டாக்
பின்னர் இதுக்குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்த மோசமான பூகம்பம் ஏற்பட்ட போது தான் டெல்லியில் இருந்ததாகவும். மறுநாளே குஜராத் திரும்பியதாகவும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டிற்கே முன்னோடியாக பேரிடர் மேலாண்மை சட்டத்தை அறிமுகப்படுத்தியது குஜராத் மாநிலம்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக எப்போது வேண்டுமானாலும் வீழும்: குலாம் நபி ஆசாத் விளாசல்
2001ல் ஏற்பட்ட மோசமான பூகம்பத்திற்கு பிறகு இந்த மாவட்டத்தை நான் வளர்ச்சி பெற செய்வேன் என உறுதி அளித்தேன். 2022 இல் அதன் வளர்ச்சியை நாம் பார்த்து வருகிறோம். அதே போல வரும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவேன் என நான் இன்று உறுதியளிக்கிறேன். அது நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்தார்.