70 சதவீதம் பேருக்கு கிடைச்சிடுச்சு… நீங்களும் முந்திக்கங்க என மத்திய அரசு கொடுத்த அறிவுரை..!
நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கேரளாவில் நேற்றைய தினம் பத்தாயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கேரளாவில் நேற்றைய தினம் பத்தாயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படாமல் இருக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அதன் பலனாக தினசரி தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 209 நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா தொற்று 19 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 18,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் கேரளாவில் நேற்றைய பாதிப்பு பத்தாயிரத்திற்கும் குறைவாக சென்றுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியெ 38 லட்சத்து 53 ஆய்ரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29,639 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை நாலரை லட்சத்தை நெருங்கியிருக்கிறது. அதேபோல் நாடு முழுவதும் இதுவரை 70 சதவீதம் பேருக்கு முதல் தவனை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் 91 கோடியை தாண்டியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொரோனாவை வெல்ல வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.