வியட்நாமுக்கு போர் கப்பலை பரிசாக வழங்கும் இந்தியா!
வியட்நாமுக்கு கொர்வெட் ஐஎன்எஸ் கிர்பானை இந்தியா பரிசாக வழங்கவுள்ளது
வியட்நாம் - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே ராணுவ உறவுகளை விரிவுபடுத்தும் வகையில், நட்புறவின் அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்திய போர்க் கப்பலான கொர்வெட் ஐஎன்எஸ் கிர்பானை இந்தியா பரிசாக வழங்கவுள்ளது. குக்ரி வகை போர்க்கப்பலான ஏவுகணை கொர்வெட் ஐஎன்எஸ் கிர்பான் 1991ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இந்த கப்பலானது வியட்நாம் கடற்படைக்கு விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சின் மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் கேங் இடையே டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர் வருகை, ராணுவ உறவுகளை மேம்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அழைப்பு.. எகிப்து செல்லும் முதல் பிரதமர்! பிரதமர் மோடியின் பயணத்திற்கு காரணம் என்ன?
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்திய போர்க்கப்பலை வியட்நாமுக்கு பரிசளிப்பது வியட்நாம் மக்கள் கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்லாக என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையகத்திற்கும் சென்ற வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர், ஆயுத அமைப்புகளின் கூட்டு உற்பத்திக்கான சாத்திக் கூறுகல் குறித்தும் விவாதித்தார்.
இந்தியா பல ஆண்டுகளாக வியட்நாமுடன் பாதுகாப்பு உறவுகளை சீராக விரிவுபடுத்தி வருகிறது, கடந்த ஆண்டு ஒரு முக்கிய ராணுவ தளவாட பகிர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.