கடந்த சில நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக அனைத்து இந்திய தொலைக்காட்சிகளும் பாகிஸ்தானில் தடை செய்யப்படும் என்று பாகிஸ்தான் ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியிருந்தது.
இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் பிரபலம் காரணமாக இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியது. அப்போது முதல், இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை இருந்து வருகிறது.
கடந்த 18ம் தேதி, உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் இறந்தனர். அதன்பிறகு, இந்திய ராணுவம், தக்க பதிலடி கொடுத்தது. இதனால், இந்த நிலை தற்போது, இன்னும் மோசமாக உள்ளது.
இதனால் பாகிஸ்தான் அரசு, இந்திய தொலைக்காட்சிகளை, பாகிஸ்தானில் ஒளிபரப்ப கூடாது என கூறியுள்ளது.
அதேவேளையில், உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளி நடிகை சல்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தினர் தீவிகரவாதிகள் முகாம்கள் பலவற்றை அழித்து ஒழித்தனர். இதனை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இதனிடையே பாகிஸ்தான் நாட்டு கலைஞர்கள் இந்தியாவில் பணி புரிய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல இயக்குநார் ஷியாம் பெனகல் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளி நடிகை சல்மா கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு வருத்தம் அளிக்கக் கூடிய சம்பவம் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானில் பிறந்தவரும் இந்தியாவின் பாடகருமான ஆதன் சமி உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, சர்ஜிகல் தாக்குதலுக்கும் பாராட்டுக்களை கூறினார்.
