Asianet News TamilAsianet News Tamil

ஐயயோ.. அபாய கட்டத்தில் இந்தியா.. எங்கும் பார்த்தாலும் மரண ஓலம்.. 1.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

India reports 131,968 new cases, 780 deaths in the last 24 hours
Author
Delhi, First Published Apr 9, 2021, 11:07 AM IST

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,31,968ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,60,542ஆக அதிகரித்துள்ளது.

India reports 131,968 new cases, 780 deaths in the last 24 hours

நேற்று ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,642ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,13,292ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 61,899 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில்  9,79,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

India reports 131,968 new cases, 780 deaths in the last 24 hours

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,64,205 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 40 லட்சத்து 41 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios