Asianet News TamilAsianet News Tamil

இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்... அலறும் பொதுமக்கள்... மிரளும் மத்திய அரசு..!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

India Records Over 1.15 Lakh Cases in 24 Hrs in Biggest Spike
Author
Delhi, First Published Apr 7, 2021, 10:28 AM IST

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,15,736 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785ஆக அதிகரித்துள்ளது.

India Records Over 1.15 Lakh Cases in 24 Hrs in Biggest Spike

நேற்று ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,177ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,92,135ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில்  8,43,473  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

India Records Over 1.15 Lakh Cases in 24 Hrs in Biggest Spike

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,08,329 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,14,39,598 ஆக அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் நேற்று வரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios