நாட்டில் உள்ள சிறந்த கல்லூரி, பல்கலைக்கான பட்டியலில், பெங்களூருவில் செயல்படும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்திற்கு(ஐ.ஐ.எஸ்சி) முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்துக்கு சென்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மனிதவள மேம்பாடு

ஆண்டுதோறும் நாட்டின் தலை சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான பட்டியலை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். கடந்த ஆண்டுகளுக்கு மாற்றமாக, நடப்பாண்டில் ஒட்டுமொத்த பிரிவு, பல்கலைக் கழகங்கள், மேலாண்மை மற்றும் பொறியியல் என 5 பிரிவுகளில் கல்வி நிலையங்கள் வகைப்படுத்தப்பட்டன.

7 ஐ.ஐ.டி. நிறுவனங்கள்

இவற்றில் ஒட்டு மொத்த பிரிவில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள 7 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.) 10 இடங்களுக்குள் வந்துள்ளன. அவற்றை தவிர்த்து பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவை சிறந்த 10 பல்கலைக் கழகங்களுள் இடம்பெற்றுள்ளன.

ஜவஹர்லால் பல்கலை.

ஜவஹர்லால் பல்கலைக் கழகத்திற்கு கடந்த ஆண்டு 3-வது இடம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் நடந்திருப்பதால், 3-வது இடத்தி்ல் இருந்து 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. கற்பிக்கும் முறை, உள்வாங்குதல், வசதிகள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, பட்டம் அளிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பிரிவில் சென்னையில் செயல்பட்டு வரும் ஐஐடி – மெட்ராஸ் முதலிடம் வகிக்கிறது.

மத்தியஅரசு வெளியிட்ட தரவரிசை பட்டியல் பின்வருமாறு:

டாப் 10 கல்லூரிகள்:

1. மிராண்டா ஹவுஸ் - புதுடெல்லி

2. லயோலா கல்லூரி- சென்னை

3. ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரி- புதுடெல்லி

4. பிஷப் ஹீபர் கல்லூரி- திருச்சி,

5. ஆத்மா ராம் சனாதன தர்ம கல்லூரி - புதுடெல்லி

6. புனித சேவியர் கல்லூரி - கொல்கத்தா

7. லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரி- புதுடெல்லி

8. தயாள் சிங் கல்லூரி- புது டெல்லி

9. தீன தயாள் உபாத்யாய கல்லூரி - புதுடெல்லி

10. மகளிர் கிறிஸ்துவ கல்லூரி - சென்னை,

டாப் 10 பல்கலைக்கழகங்கள்:

1. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் - பெங்களூரு

2. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - புதுடெல்லி

3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

4. ஜவஹர்லால் நேரு சென்டர் பார் அட்வான்ஸ்ட் சைன்டிபிக் ரிசேர்ச்

5. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

6. அண்ணா பல்கலைக்கழகம்

7. ஐதராபாத் பல்கலைக்கழகம்

8. டெல்லி பல்கலைக்கழகம்

9. அமிர்த விஷ்வ வித்யாபீடம்

10. சாவித்ரிபா புலே பல்கலைக்கழகம் - புனே

 

டாப் 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்

 

1. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்

2 ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - பெங்களூரு

3. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கொல்கத்தா

4. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - லக்னோ

5. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கோழிக்கோடு

6. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - டெல்லி

7. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - காரக்பூர்

8. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - ரூர்கீ

9. சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் - ஜான்ஷெட்பூர்

10. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இந்தூர்

டாப் 10 பொறியியல் கல்லூரிகள்

1. ஐ.ஐ.டி. சென்னை

2. ஐ.ஐ.டி. மும்பை

3. ஐ.ஐ.டி. காரக்பூர்

4. ஐ.ஐ.டி. புதுடெல்லி

5. ஐ.ஐ.டி. கான்பூர்

6. ஐ.ஐ.டி. ரூர்கேலா

7. ஐ.ஐ.டி. கவுகாத்தி

8. அண்ணா பல்கலைக்கழகம் ,சென்னை

9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

10. ஐ.ஐ.டி. ஐதராபாத்

ஒட்டுமொத்த டாப் 10 கல்வி நிறுவனங்கள்:

1. ஐ.ஐ.எஸ்சி - பெங்களூரு

2. ஐ.ஐ.டி. - சென்னை

3. ஐ.ஐ.டி. - மும்பை

4. ஐ.ஐ.டி. - காரக்பூர்

5. ஐ.ஐ.டி. - டெல்லி

6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: புதுடெல்லி

7. ஐ.ஐ.டி. - கான்பூர்

8. ஐ.ஐ.டி. - குவாஹட்டி

9. ஐ.ஐ.டி. - ரூர்கேலா

10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்