IECC EC : இந்தியா உள்பட பல நாடுகள்.. ஜி20 மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் - முழு விவரம்
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பா இடையே பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் கையெழுத்தானது. இந்த பொருளாதார வழித்தடத்தின் கட்டுமானமானது தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா/மத்திய கிழக்கு ஐரோப்பா இடையே சிறந்த இணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
இந்த இணைப்புக்காக, இரண்டு தனித்தனி பொருளாதார வழித்தடங்கள் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி 20 மாநாட்டின் போது இந்த திட்டம் கையெழுத்தானபோது, சீனாவுக்கு இது ஒரு மிகப்பெரிய பெரிய செய்தியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. காரணம், இந்த திட்டம் சீனாவின் லட்சிய திட்டமான பெல்ட் மற்றும் ரோடு திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறியது போலவே IECC EC இரண்டு தனித்தனி வழித்தடங்களை கொண்டிருக்கும் (1) இந்தியாவை மேற்கு ஆசியா / மத்திய கிழக்குடன் இணைக்கும் கிழக்கு வழித்தடம் மற்றும் (2) மேற்கு ஆசியா / மத்திய கிழக்கை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு வழித்தடம். இந்த வழித்தடம் ஒரு இரயில் பாதையை உள்ளடக்கும், மேலும் இது ஒரு நம்பகமான மற்றும் செலவு குறைந்த எல்லை தாண்டிய கப்பல் மற்றும் இரயில் போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.
தற்போதுள்ள பல-மாடல் போக்குவரத்து வழிகளுக்கு துணைபுரியும் வகையில், இந்தியா வழியாக தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையே சரக்குகள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது இந்த புதிய வழித்தடம்.
பிராந்திய நாடுகளுடனான தொடர்பு, இந்தியாவிற்கு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்பதன் ஒரு பகுதியாக, முதலீடு செய்வதற்கும், ஒத்துழைப்பதற்கும், இணைப்பை உருவாக்குவதற்கும் இந்தியா எப்போதும் உழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அசாத்திய இணைப்பை விரிவுபடுத்தும் அதே வேளையில், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பொறுத்து, இணைப்பு முயற்சிகள் ஆலோசனை, வெளிப்படையான மற்றும் பங்கேற்புடன் இருப்பதை உறுதி செய்வது முக்கியமாகும்.
பெறுநர்களுக்கு தாங்க முடியாத கடன் சுமையை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்கும், சுற்றுச்சூழல் தரங்களுக்கு இணங்குவதற்கும் நிதி பொறுப்பு மற்றும் பொருளாதார நம்பகத்தன்மையின் கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தி ஒத்துழைப்பின் நோக்கம், அது மாற்று அணுகுமுறையின் அடையாளங்களாக தனித்து நிற்கும், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள முக்கிய பங்காளர்களுடன் நமது உறவை உறுதிப்படுத்தி, சர்வதேச வர்த்தகம் மற்றும் தளவாட வழித்தடங்களில் இணைவது நமது தொழில் மற்றும் வணிகத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.
தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வளைகுடா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா வரையிலான வர்த்தகப் பாதையில் இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்துவதால், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் பெரும் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, கணிசமான மூலோபாய மற்றும் பொருளாதார நன்மைகளையும் இந்தியா இதன் மூலம் பெறுகிறது.
டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு.. இதுவரை என்ன நடந்தது? - முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு பார்வை!