தென் கொரியாவிடம் இருந்து 4600 கோடி ரூபாய் மதிப்புடைய 100 தானியங்கி பீரங்கிகளை இந்தியா வாங்கவுள்ளது.

உலகின் 5 ஆவது மிகப்பெரிய ராணுவ வலிமை கொண்டது நமது இந்திய ராணுவம். ஆண்டுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவத்திற்காக ஒதுக்கப்படுகிறது.

நாளைக்கே போர் வெடித்தாலும் களத்தில் 13,25,000 ஆயிரம் ராணுவ வீரர்கள் குதிக்கத் தயார். துப்பாக்கிகளை ஏந்தி முன் செல்லும் ராணுவ வீர்ர்களுக்கு பக்கபலமாக 6,464 பீரங்கிகள் உள்ளன. வான் வெளியைப் பாதுகாக்க 1,905 போர் விமானங்களும், 15 நீர் மூழ்கி கப்பல்களும் நமது ராணுவத்திற்கு பக்க பலமாக உள்ளன…

நம்மைவிட பொருளாதாரத்தில் பலமடங்கு பலமுடன் இருக்கும் கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது.

ஆனால் வளரும் நாடுகளின் பட்டியலில் இருக்கும் இந்தியா 5 ஆவது இடத்தை பிடித்ததுள்ளது. என்ன காரணம் என்று அலசி ஆராயத் தேவையில்லை. இந்தியாவின் ராணுவ வலிமைக்கு சிப்பாய்களின் எண்ணிக்கையே காரணம்.

பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தில் கூட அதிகபட்சம் 1 லட்சத்து 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளனர். வெறும் அதிக அளவிலான ராணுவ வீரர்களை கொண்டிருந்தால் ஒரு ராணுவம் பலமானதாக கருத முடியும் என்றால் இல்லை என்பதே பதில்.

ஆட்களின் எண்ணிக்கையை விட ஆயுதங்களின் எண்ணிக்கையிலும், தொழில்நுட்பத்திலும் பிற நாடுகளைக் காட்டிலும் நம் சற்று பலவீனமாக உள்ளோம். அப்பாலே போ சாத்தானே என்பதைப் போல கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை நாம் இப்போது தான் தூக்கியெறிந்து வருகிறோம்.

பிரான்ஸ்கிட்ட இருந்து ரபேல் போர் விமானத்த வாங்கறதுக்குள்ளே நமக்கு நாக்கு தள்ளிருச்சு. போபர்ஸ் பீரங்கி ஊழல் ஊரறிந்த ஒன்று..

அவுட்டேட்டேடு எக்யூப்மென்ஸ்டோடு  மல்லுக்கட்டியது போதும் இதோ தென் கொரியாவில் இருந்து பறந்து வருகிறது K9 Vajra – T tracked self Propelled Artillery எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட பீரங்கிகள்.

சும்மா அதிருதல்ல என்ற ரஜினிகாந்தின் டயலாக்கைப் போலவே இந்த பீரங்கிகளும் எதிரிகளை ஆட்டம் காணச் செய்துவிடும். 47 டன் எடை, 12 மீட்டர் நீளத்துடன் பிரம்மாண்ட தோற்றம் கொண்ட  இந்த பீரங்கிகள் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

இந்திய ராணுவத்தின் பலத்தை கூட்டும் வகையில் இந்த பீரங்கிகளை சுமார் 4600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியா வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் இந்தியா தென் கொரியா இடையே கையெழுத்தாகி உள்ளது. அருணாச்சலப்பிரதேசம் எனதே என்று இன்று வரை நமக்கு குடைச்சல் கொடுத்து வரும் சீனாவின் சமீபத்திய சீற்றங்களை சமாளிக்க இதுபோன்று நமக்கு ஆயிரம் பீரங்கிகள் தேவை.