அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமங்களில் கூட இன்று பேஸ்புக் நுழைந்து விட்டது என்று சொல்லலாம்.
அந்தளவுக்கு பேஸ்புக் உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

சினிமா,அரசியல்,சமூக செயல்பாடுகள் என அனைத்து துறையிலும் பேஸ்புக் தற்போது பெரும் பங்கு வகிக்கிறது.
உலகமெங்கும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் அனைத்து தலைமுறையினரும் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.

உலகிலேயே பேஸ்புக் உபயோகத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தியா. இந்த சமூக வலைத்தளத்தை இந்தியாவில் மட்டும் மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர்.எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.

உலகப்புகழ் பெற்ற ‘தி நெக்ஸ்ட் வெப்’ அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டுமே ‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இது 12 சதவீதமாக உள்ளது.