india is ready to attack china and pakistan at the same time
பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலையும், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போரையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போருக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.ஒருவேளை இருதரப்பு போர் என்றால், முழு அளவிலான தாக்குதலுக்கு விமானப்படைக்கு 42 படைப்பிரிவுகள் தேவைப்படும். வரும் 2032-ம் ஆண்டிற்குள் இந்திய விமானப்படை 42 போர் படைப்பிரிவுகளை பெறும். சீன படைகளையும் இந்தியாவால் எதிர்கொள்ள முடியும். அதற்கான வலிமை இந்திய விமானப்படையிடம் உள்ளது. சம்பி பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படைகள் முழுவதுமாக திரும்பப் பெறவில்லை. விரைவில் தங்கள் நாட்டுப் படைகளை சீனா திரும்பப் பெறவேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் தனோவா தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கக்கூடிய திறன், இந்திய விமானப் படைகளுக்கு இருப்பதாக விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார்.
