Asianet News TamilAsianet News Tamil

’3 நிமிடத்தில் அழித்தோம்...’ தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி எடுத்த விண்வெளி அஸ்திரம்..!

விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

India has entered its name as an elite space power
Author
Delhi, First Published Mar 27, 2019, 1:25 PM IST

விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

 India has entered its name as an elite space power

முன்னதாக பிரதமர் மோடி உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து முக்கியமான தகவலுடன் நாட்டு மக்களிடம் 15 நிமிடத்திற்கு உரையாற்ற உள்ளேன் எனப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆகையால் பிரதமர் மோடி என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையேயும் நிலவி வந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அவரால் நலத் திட்டங்களையும் அறிவிக்க இயலாது. India has entered its name as an elite space power

இந்நிலையில் பிரதமர் மோடியின் உரை தொலைக்காட்சி, வானொலி, சமூக வளைத்தலங்களில் நேடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது பிரதமர் கூறுகையில்;- விண்வெளியில் இந்தியா மிகப்பெரிய சாதனையை  நிகழ்த்தியுள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா வெற்றி கண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு  அடுத்தபடியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. India has entered its name as an elite space power

இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்று பிரதமர் மோடி விளக்கமளித்தார். மிஷன் சக்தி என்ற இந்தச் சோதனை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டது. மேலும் 3 நிமிடங்களில் விண்வெளியில் இருந்த செயற்கைக்கோள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இந்தியா பெரிய நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சோதனை நமது நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் எனப் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios