இந்தியாவில் கொரோனாவுக்கு 45 லட்சம் பேர் பலி.. வெளியான ‘பகீர்’ தகவல் ! மத்திய அரசு அதிர்ச்சி

WHO : உலக சுகாதார அமைப்பு  (WHO) கடந்த சில மாதங்களுகு முன்னர்  இந்தியாவில் கொரோனாவுக்கு 45 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அறிக்கை வெளியிட்டுருந்தது.

India Dismayed Over WHO Covid Mortality Report, Authentic Data Not Taken into Account, Says Mandaviya

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர் இந்த கொரோனா உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வேக்சின் பணிகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்த போதிலும், இன்னும் கூட உலகின் பெரும்பாலான நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடிக்கொண்டன. 

India Dismayed Over WHO Covid Mortality Report, Authentic Data Not Taken into Account, Says Mandaviya

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தன. கொரோனா குறைந்த பின்னரே, இந்தப் பயணத் தடைகள் மெல்ல நீக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனா இறப்பை அதிகப்படுத்தி உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உலக சுகாதார மாநாட்டில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். உலக சுகாதார அமைப்பு  (WHO) கடந்த சில மாதங்களுகு முன்னர்  இந்தியாவில் கொரோனாவுக்கு 45 லட்சம் பேர் வரை  உயிரிழந்திருக்கலாம் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

இதற்கு அப்போதே மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தொடர்ந்து கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றன. ஏற்கனவே குஜராத்தில் நடைபெற்ற மாநில  சுகாதாரத் துறை அமைச்சர்களின் 14வது கவுன்சில்  மாநாட்டில் இதுகுறித்து பேசியிருந்த மத்திய அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா,  இந்தியாவை குறைத்து மதிப்பிடுவதே இந்த அறிக்கையின் நோக்கம் என விமர்சித்திருந்தார்.   சட்டவிதிமுறைகளை பின்பற்றி முறையாகவும், வெளிப்படையாகவும் கொரோனா இறப்புகளை மாநிலங்கள் பதிவு செய்வதாகவும் கூறி  கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் 45 லட்சம் பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என அறிக்கை வெளியிட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள 23 மாநில சுகாதார அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து  உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததையும்  சுட்டிக்காட்டினார்.  

India Dismayed Over WHO Covid Mortality Report, Authentic Data Not Taken into Account, Says Mandaviya

மேலும், இந்திய அரசு சட்டப்படி, உருவாகிய வலுவான மற்றும் துல்லியமான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனியார் அமைப்புகளின் துல்லியமற்ற தகவல்களை நம்பக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.  இருந்தபோதிலும்,   உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்துறை தொழில்நுட்ப இயக்குனர் வில்லியம், கிடைத்துள்ள தரவுகளின் படி இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios