Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் 5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..! தாறுமாறாக எகிறும் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது. 
 

india crosses 5 lakh milestone in corona positive cases
Author
Chennai, First Published Jun 26, 2020, 10:36 PM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் தாறுமாறாக அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பில், உலகளவில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய 3 நாடுகளுக்கு அடுத்து 4ம் இடத்தில் உள்ளது இந்தியா. 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒருநாளில் 5024 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,52,765ஆக அதிகரித்துள்ளது. 

india crosses 5 lakh milestone in corona positive cases

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 3645 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 74,622ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,240ஆக உள்ளது. 

தமிழ்நாட்டில் தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது. இந்தியாவில் 5 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பில் 5 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios