India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 41 பேர் உயிரிழந்துள்ளனர் 

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,092 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 16,561 ஆகவும் நேற்று 15,815 ஆகவும் இன்று 14,092 ஆக கொரோனா குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,53,464 ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க:தமிழகத்தில் இன்றை கொரோனா நிலவரம்… ஒரே நாளில் 824 பேருக்கு தொற்று உறுதி!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 16,454 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,36,09,566 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,16,861 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 15,815 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 68 பேர் பலி

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,27,037ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.19 % ஆக குறைந்துள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.54 % ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 207.99 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 28,01,457 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.