இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் அமெரிக்காவில் குறைந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதேவேளையில் அமெரிக்காவில் இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணம் 41  சதவீதம் குறைந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இதய நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஆகியவை பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களில் பெரும்பாலும் இதய நோயால் இறப்பவர்களே அதிகம் என்று ஆய்வில்

இந்தியர்கள் ஆரோகியமான வாழ்க்கை முறையை கையாள்வது அவசியம் என்றும் இந்திய அரசு மக்கள் பெருக்கம் தொடர்பான திட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதில் பஞ்சாப் மற்றும் மேற்குவங்கத்தில் அதிக இறப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.