Asianet News TamilAsianet News Tamil

வருமான வரி இரண்டாவது முறையாக கால நீட்டிப்பு! அக்டோபர் 15 வரை செலுத்தலாம்...

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Income Tax returns...2 time date extension
Author
Delhi, First Published Sep 24, 2018, 5:42 PM IST

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர வருமானம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, கடந்த ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

 Income Tax returns...2 time date extension

படிவம் தாமதம், வரி பிடித்தம் (டி.டி.எஸ்.) குறித்த தகவலை இணையதளத்தில் பதிவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால், கடந்த நிதியாண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்திருந்தது.

 Income Tax returns...2 time date extension

மேற்கண்ட காரணங்களால் மீண்டும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய வரிவிதிப்பு வாரியம் இதனை அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios