in UP hospital they used patient leg as pillow
உத்தர பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதால் அவரது காலை துண்டித்த டாக்டர்கள் சிறிது நேரம் அந்த காலை அவருக்கு தலையணையாக வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்தவர் ராஜிவ்குமார். இவர் நேற்று முன்தினம் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து ராஜிவ்குமாரை மீட்ட போலீசார் அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் துரதிஷ்ட்ரவசமாக அவரது காலில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது காலை துண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ராஜிவ் குமாரின் காலை துண்டித்து எடுத்த மருத்துவர்கள், சிகிச்சையின்போது நோயாளிக்கு தலையணை இல்லாததால் அந்த காலையே சிறிது நேரம் தலையணையாக பயன்படுத்திதாக கூறப்படுகிறது.
இதனை அங்கிருந்த ராஜிவ் குமாரின் உறவினர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து முகநூலில் வெளியிட்டுள்ளார். இந்த படம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
