Asianet News TamilAsianet News Tamil

KVS Admission 2022 - 23 : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வயது வரம்பு அதிகரிப்பு.. பெற்றோர்கள் அதிர்ச்சி..

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

In Kendriya Vidyalaya schools of the age limit for admission has been changed
Author
India, First Published Feb 28, 2022, 11:20 AM IST

மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள, கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில், கே.வி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.முன்னுரிமைஇவற்றில், ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினரின் குழந்தைகளுக்கு, மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

In Kendriya Vidyalaya schools of the age limit for admission has been changed

குறைந்த பட்சம் ஆறு வயதாகியிருக்க வேண்டும்; அதிகபட்சம் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை வழங்கப்படும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.புதிய கல்வி கொள்கையின்படி, வரும் கல்வியாண்டு முதல் இந்த வயது வரம்பு உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. 

In Kendriya Vidyalaya schools of the age limit for admission has been changed

இதில் மாணவர்களுக்கு 6 வயது முடிந்திருக்க வேண்டுமா அல்லது 5 வயது முடிந்து, 6 வயதில் இருக்க வேண்டுமா என்ற தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே, 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில் தற்போது 1ம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிறைவடைய வேண்டும் என, திடீரென வயது வரம்பை உயர்த்துவதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும் சூழல் ஏற்ப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த ஆண்டு குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்த்துவிடலாம் என்று நினைத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios