ஜம்மு காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் ஏன் இல்லை... நீண்டகாலக் கனவை நனவாக்கும் பிரதமர் மோடி!
2013 டிசம்பரில் லால்கர் பேரணியில் பேசிய மோடி, "ஜம்முவில் ஐஐடி மற்றும் ஐஐஎம் இருக்க வேண்டாமா? இந்த இடத்தில் இருக்கும் இளைஞர்கள் படித்து உலகப் புகழ் பெற முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
2013 டிசம்பரில் லால்கர் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி ஜம்மு காஷ்மீரில் IIT, IIM கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று பேசினார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் படித்து புகழ் பெற முடியாதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது அந்தக் கனவை மெய்ப்பிக்கும் வகையில் இன்று ஜம்முவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கான நிரந்தர வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், ஜம்முவில் சம்பா மாவட்டத்தில் உள்ள விஜய்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்து வைக்க இருக்கிறார்.
2013 டிசம்பரில் லால்கர் பேரணியில் பேசிய மோடி, "ஜம்முவில் ஐஐடி மற்றும் ஐஐஎம் இருக்க வேண்டாமா? இந்த இடத்தில் இருக்கும் இளைஞர்கள் படித்து உலகப் புகழ் பெற முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் 80% பேர் போதையில் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல்! கருத்துக்கணிப்பில் அதிர்ச்சித் தகவல்!
"ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதில் ஜம்மு காஷ்மீர் அரசுக்கோ, மத்திய அரசுக்கோ ஈடுபாடு இல்லை!" என்றும் விமர்சித்தார்.
இங்குள்ள இளைஞர்களும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க ஆசைப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இப்போது அது உண்மையாவதையும் உறுதி செய்துள்ளார். ஐஐஎம் ஜம்முவின் நிரந்தர வளாகத்தை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். ஜம்முவில் சம்பா மாவட்டத்தில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
ஐஐடி ஜம்முவின் கல்வி வளாகம் மற்றும் விடுதி கட்டிடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 9க்குப் பின் வெளியீடு? இறுதிகட்ட ஆய்வில் தேர்தல் அதிகாரிகள்!