kejriwal: bjp:கெஜ்ரிவால் யோக்கியம் தெரிந்துவிட்டது! மதுபான வழக்கில் ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோவை வெளியிட்டது பாஜக
மதுபான வழக்கில் ஸ்டிங், ஆம் ஆத்மி கட்சி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேர்மை குறித்த ஆப்ரேஷன் வீடியோவை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
மதுபான வழக்கில் ஸ்டிங், ஆம் ஆத்மி கட்சி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேர்மை குறித்த ஆப்ரேஷன் வீடியோவை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மணிஷ் ஷிசோடியா குறித்த ஸ்டிங் ஆப்ரேஷனே பாஜக நடத்தி வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் ஊடகங்களுக்கு இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோ காண்பித்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது
டெல்லியில் உள்ள மதுபான வர்த்தகர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எவ்வளவு கமிஷன் கொடுத்துல்ளீரக்ள் என்பது வீடியோவாக வந்துவிட்டது.
இப்போது கெஜ்ரிவால், மணிஷ் ஷிசோடியா தப்பிக்க எந்த வழியும் இல்லை. கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபோது, எந்தவிதமான ஊழல் குறித்தும் மக்கள் ஸ்டிங்ஆப்ரேஷன் நடத்தி வெளியிடுங்கள் எனத் தெரிவித்தார். அதுதான் உண்மையாகவே இப்போது நடந்துள்ளது.
Cyrus Mistry: Tata Sons: சைரஸ் மிஸ்திரி இறப்புக்கு இதுதான் காரணம்? 9 நிமிடங்களில் 20 கி.மீ!
ஸ்டிங் மாஸ்டர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஸ்டிங் ஆப்ரேஷன் நடந்துள்ளது. இந்த வீடியோவில் உள்ள செயல்திட்டத்தில் 80 சதவீத லாபம் கெஜ்ரிவாலுக்கும், மணிஷ் ஷிசோடியாவுக்கும் அவரின் நண்பர்களுக்கும் செல்லும்.
முதலில், நீங்கள் எங்களின் 80% கமிஷனைக் கொடுத்துவிட்டு, 20 சதவீதத்தை எப்படி வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் கவலைப்பட மாட்டோம். இதுதான் கெஜ்ரிவால் கொள்கை.
ஒரு மதுபாட்டிலுக்கு ஒருபாட்டில் இலவசமாக கொடுத்தால் அவர்கள் லாபம் அடைவார்கள். அவர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள் என்பதைக் கவனியுங்கள். இந்த வழக்கில் தொடர்புடைய மார்வாஜி இந்த வீடியோவை ஒப்புக்கொண்டுவிட்டார். மணிஷ் ஷிசோடியா தப்பிக்க வழியில்லை
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.
இந்த ஸ்டிங் வீடியோவில் சன்னி மார்வாவின் தந்தை குல்விந்தர் மார்வா. அதாவது மதுபான வழக்கில் 12வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர். இந்த ஸ்டிங் வீடியோ குறித்து ஆம் ஆத்மி சார்பில் எந்தவிதமான கருத்தும் இதுவரை வெளியாகவில்லை.
ட்விட்டரில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி இருக்கு.. களத்தில் காணோம் - கலாய்த்த குலாம்நபி ஆசாத்
மதுபான ஊழல் வழக்கில் கடந்த மாதம் சிபிஐ, மணிஷ் ஷிசோடியா வீட்டில் சோதனையிட்டது. அவரின் வங்கி லாக்கரையும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால், இந்த ஊழல் குற்றச்சாட்டை கெஜ்ரிவால், ஷிசோடியா இருவரும் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.