Asianet News TamilAsianet News Tamil

‘பிரசவ ஆப்ரேஷன்’ அறையில் சண்டையிட்ட டாக்டர்கள் - பிறந்த பச்சிளங்குழந்தை உயிரிழப்பு...

In a hospital hospital two doctors were fiercely quarreled in labor camps
In a hospital hospital two doctors were fiercely quarreled in labor camps
Author
First Published Aug 30, 2017, 3:58 PM IST


ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ ஆப்ரேஷன்அறையில் இரு டாக்டர்களும் கடும் வாக்குவாதம்செய்து சண்டையிட்டனர். இவர்களின் சண்டையில் பிறந்த குழந்தையை சரியாக கவனிக்காமல் இருந்ததால், அது பரிதாபமாக இறந்தது.

ஜோத்பூர் நகரில் உமைத் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. எஸ்.என். மருத்துவக்கல்லூரியின் கீழ் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு அனிதா என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் அவரை பிரசவ ஆப்ரேஷன் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த பெண்ணுக்கு மகப்பேறுயியல் மருத்துவர் அசோக் நைனிவாலும், மயக்கமருந்து நிபுனர் எம்.எல். தாக்கும் பிரசவம் பார்த்தனர். அதில் அனிதாவுக்கு அழகிய குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தைக்கு இதயம் பலவீனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் மருத்துவவ் அசோக் நைனிவாலுக்கும், மயக்கமருந்து நிபுனர் எம்.எல். தாக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். இதனால், பிறந்த குழந்தையை கவனிக்க தவறினர்.

இந்த இரு மருத்துவர்களும் ஏறக்குறைய 30 நிமிடங்கள் சண்டையிட்டுக்கொண்டது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. முடிவில், பிறந்த பச்சிளங்குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் இருந்ததால், அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும், ஊடங்களிலும் வௌியாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அந்த இரு மருத்துவர்களையும் சஸ்பெண்ட்செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த சம்பவத்தை தானாக முன்வந்து எடுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அது குறித்து அறிக்கை அளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இரு மருத்துவர்கள் மீதும்வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் காளிசரண் கூறுகையில், “ இரு மருத்துவர்கள் சண்டையிட்டது, குழந்தை இறந்தது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்க கேட்டுள்ளோம். அறிக்கையின் மருத்துவர்கள் மீது தவறு இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios