அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் இவங்கதான்! கணவருடன் சிக்கிய பிரியங்கா காந்தி!

அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது. 

In A First, Priyanka Gandhi Vadra Named In Probe Agency Chargesheet sgb

மத்திய அரசின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் அமலாக்கத்துறை, எதிர்க்கட்சியைச் சேர்ந்த இன்னொரு தலைவரைக் குறிவைத்துள்ளது.

அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி விற்றது தொடர்பான வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைப்பு: வெளியுறவுத்துறை தகவல்

In A First, Priyanka Gandhi Vadra Named In Probe Agency Chargesheet sgb

வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர் சி.சி.தம்பி மற்றும் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சுமித் சாதா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் மற்றும் பிற சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவரும் பணமோசடி செய்துவிட்டு தப்பியோடிய ஆயுத வியாபாரியுமான சஞ்சய் பண்டாரி தனது வருமானத்தை மறைக்க உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான எச்.எல்.பஹ்வாவுக்கு 2006ஆம் ஆண்டு தனது விவசாய நிலத்தை விற்றது தொடர்பாக பிரியங்கா காந்தியின் பரிவர்த்தனைகள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. அமலாக்கத்துறை ஆவணங்களின்படி, ஏப்ரல் 2006 இல், ஃபரிதாபாத்தின் அமிபூர் கிராமத்தில், பிரியங்கா காந்தி பெயரில் ஒரு வீடு வாங்கப்பட்டு, பின் எச்.எல்.பஹ்வாவுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா 2005 மற்றும் 2006 க்கு இடையில் அமிபூரில் 40.8 ஏக்கர் நிலத்தை முகவர் பஹ்வா மூலம் தான் வாங்கியுள்ளார். பின், 2010 டிசம்பரில் அதையெல்லாம் அவருக்கே திரும்ப விற்றார். இதேபோன்ற கொடுக்க வாங்கல் சி.சி. தம்பியுடனும் நடந்துள்ளது. 2020ல் அவர் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

ராபர்ட் வத்ராவுக்கு சி.சி.தம்பியுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவு இருப்பதாகக்  கூறி, அமலாக்கத்துறை அவரது பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்திருந்தது.

மோடி செல்ஃபி பாயிண்ட் தேவையா? எதுக்கு இந்த வெட்டிச் செலவு? ஷாக் கொடுத்த ஆர்டிஐ பதில்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios