7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

importance of 7 aspects in the budget says finance minister nirmala sitharaman

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 5 ஆவது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கான திட்டங்கள், புதிய வருமான வரி முறை, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக லாபம் தரும் புதிய அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்கள், இந்திய ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவை உருவாக்க வலிமையான அடித்தளம்: பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி புகழாரம்

இந்த நிலையில் மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது மத்திய பட்ஜெட் 2023. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: ChatGPT எதிரொலி! செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு

ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios