Asianet News TamilAsianet News Tamil

அலெர்ட்.! உடனே இதை பண்ணுங்க.. எல்லா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை..மத்திய அரசு அதிரடி உத்தரவு !

கொரோனா நிலைமை குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. 

Immediately intensify Federal Health Alert nationwide central govt alert all states
Author
First Published May 21, 2022, 12:57 PM IST

நாடு முழுவதும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான வேகத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியது. நம் இந்திய அரசு கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா நிலைமை குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. 

Immediately intensify Federal Health Alert nationwide central govt alert all states

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் பேசும்போது, எந்த நிலையிலும் தடுப்பூசிகளை வீணாகாமல் பார்த்துக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஒரு தீவிர இயக்கம்போல நடத்த வேண்டும், ஜூன், ஜூலை மாதங்களில் வீடுதோறும் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தின் 2-வது கட்டத்தின்போது முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறைகள், செங்கல்சூளைகள் விடுபடக்கூடாது. அங்கும் சென்று முதல், இரண்டாவது மற்றும் முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள் போடாதவர்களுக்கு போடுவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்களில் 18 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஒழுங்காக ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : "பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்..கொலைகாரனை பத்தி பேசுறீங்க.!" கடுப்பான அமெரிக்கை நாராயணன்

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

Follow Us:
Download App:
  • android
  • ios