ICSE தேர்வுகள்; வெளியானது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை!
ICSE Exams Date Sheet : ICSE மற்றும் ISC 2025ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முழு நேர அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில், CISCE, ICSE (வகுப்பு 10) மற்றும் ISC (வகுப்பு 12)க்கான தேர்வு தேதித் தாளை நவம்பர் 25, 2024 திங்கட்கிழமை வெளியிட்டது. மாணவர்கள் அதை cisce.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து கால அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கள்கிழமை வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, 10 ஆம் வகுப்பு அல்லது ICSE போர்டு தேர்வுகள் பிப்ரவரி 18 முதல் மார்ச் 27, 2025 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5, 2025 அன்று வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 பிரயாக்ராஜ் கும்பமேளா: கங்கை சேவகர்கள் பயிற்சி முகாம் தயார்!
இன்று வெளியான கவுன்சில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில், ICSE மற்றும் ISC முடிவுகள் மே 2025ல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். தேர்வு நாள் அறிவுறுத்தல்கள், தேர்வர்களுக்கான வழிகாட்டுதல், தேர்வுகளின் போது நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்துதல் குறித்த தகவல், விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பல தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது..
கடந்த ஆண்டு, ICSE மற்றும் ISC போர்டு தேர்வுகளுக்கான தேதி தாளை CISCE டிசம்பர் 8, 2023 அன்று வெளியிட்டது. 10 ஆம் வகுப்பு அல்லது ICSE போர்டு தேர்வு 2024 பிப்ரவரி 21 முதல் மார்ச் 28, 2024 வரை நடைபெற்றது. இதேபோல். ISC அல்லது 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 3, 2024 வரை நடத்தப்பட்டது. மேலும், இரண்டு தேர்வுகளின் முடிவுகளும் மே 6, 2024 அன்று வெளியிடப்பட்டன, இதில் மொத்தம் 2,42 328 பேர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றனர் மற்றும் 98,088 பேர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
மன் கி பாத்: கங்கை நதிக்கரையில் தூய்மை செய்யும் இளைஞர்கள் குழு- பாராட்டிய மோடி