இந்தியாவில் E-டிரக்குகளுக்கான EV பணிக்குழு.. புதிய முன்னெடுப்பை துவங்கிய ICCT - என்ன அது? முழு விவரம்!
E Trucks in India : இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகம் FICCI, SIAM, CII மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் E-டிரக்குகளுக்கான EV பணிக்குழுவை அமைத்துள்ளது.
தூய்மையான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சில் (ICCT) இன்று வியாழன் அன்று கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) EV பணிக்குழுவை அமைத்துள்ளது, அதில் மின்சார டிரக்குகள் மற்றும் துணை உள்கட்டமைப்பு தொடர்பான விஷயங்களை ஆராய்ச்சி நிறுவனம் வழிநடத்தும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI), இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் பிற ஏஜென்சிகளுடன் இணைந்து MHI இந்த பணிக்குழுவை அமைத்துள்ளது என்று ICCT வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த பணிக்குழுவின் மூலம், ICCT ஆனது MHI உடன் இணைந்து பங்குதாரர்களுடன் பயிலரங்குகள் மற்றும் பங்குதாரர் சந்திப்புகள் மூலம் மின்-டிரக் அடாப்ஷன் உள்ளிட்ட அம்சங்களைப் பற்றிய அவர்களின் நுண்ணறிவு மற்றும் பரிந்துரைகளை மேன்படுத்தும்.
அடேங்கப்பா! இன்வெர்ட்டரையே மிஞ்சும் பவர் பேங்க்! அசத்தும் ஆம்பிரேன் PowerHub 300!
“MHI அமைக்கப்பட்ட இந்த பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பொதுவாக இ-டிரக்குகள் மற்றும் EVகள் பற்றிய ஆராய்ச்சியில் ICCT-ன் பின்னணி இதற்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த பங்குதாரர் ஆலோசனைகள் மூலம், இத்துறையில் ஒரு விரிவான மேப்பிங் மற்றும் பகுப்பாய்வை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தியாவில் டிரக்குகளின் மின்மயமாக்கல் நிலையான போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை ஆதரிக்கும்,” என்று ICCT இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அமித் பட் கூறினார்.
காலநிலை மாற்றத்தில், போக்குவரத்து துறை வேகமாக வளர்ந்து வரும் ஒரு பங்களிப்பாகும். இந்தியாவில், நடுத்தர மற்றும் கனரக டிரக்குகள் மொத்த வாகன மக்கள்தொகையில் 2 சதவீதத்தை மட்டுமே உருவாக்குகின்றன, ஆனால் ஒட்டுமொத்த வாகன சாலை போக்குவரத்து உமிழ்வுகளில் 45 சதவீதத்திற்கு பங்களிக்கின்றன என்பது குறிபிடத்தக்கது.
பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் அதன் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) ஆகியவற்றின் கீழ் EV-களின் அதிகரிப்பு இந்தியாவிற்கு பெரிய அளவில் உதவும். எனவே லாரிகளை மின்மயமாக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
நீர்மூழ்கி எதிர்ப்பு ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி!