தெலுங்கானாவில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, தெலங்கானா அரசுடன் போக்குவரத்து கழகங்களை இணைக்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த மாதம் 5-ம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இவர்களது கோரிக்கைக்கு அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராத மாநில அரசு 48,000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தது. ஆனாலும், போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சில ஊழியர்கள் தற்கொலை செய்தனர். ஊழியர்களின் போராட்டத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முதல்வர் சந்திரசேகரராவ் இறுதி கெடு விதித்துள்ளார். 5-ம் தேதி நள்ளிரவுக்குள் போராட்டத்தை கைவிடா விட்டால் 50 சதவீதம் தனியார் மயமாக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஆனால், போக்குவரத்து ஊழியர் எதுக்கும் அஞ்சவில்லை.
இந்நிலையில், பேருந்து மறியல் போராட்டத்தில் நவம்பர் 16-ம் தேதி ஈடுபடப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அனைத்து தெலுங்கானா போக்குவரத்து பணிமனைகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். 2003-ம் ஆண்டு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதேபோன்ற பல ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். பின்னர் அவர்களது கோரிக்கையை கொஞ்சம் கூட செவிசாய்க்காமல் இருந்து வந்தார். தற்போது அதேபோல தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும் இருந்து வருகிறார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 16, 2019, 2:27 PM IST