Hyderabad gang rape: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17வயது சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர் அடையாளம் காணப்பட்டதில் 3 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17வயது சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர் அடையாளம் காணப்பட்டதில் 3 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் மே 28ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 17வயது சிறுமி, 5 பேரால் சிவப்பு நிற சொகுசு காரில் கடத்தப்பட்டார். இந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதி முழுவதும் வசதியானவர்கள், பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியாகும். இந்த சிறுமியை கடத்திச்சென்ற 5 பேரும் பப்பிற்கு அழைத்துச்சென்றுவிட்டு, அங்கிருந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்து தப்பினர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஹைதராபாத் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் சிறுமி காரில் கடத்தப்பட்ட பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் சிறுவர்கள் எனத் தெரியவந்தது.
அந்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஐபிசி 376 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 5 பேரும், பெரும் அரசியல்வாதிகள், குழந்தைகள், பேரன்கள் என்பதால், இதை மறைக்க முயற்சி நடக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஜோயல் டேவிஸ் கூறுகையில் “ குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஏதும் சொல்லமுடியவில்லை. ஒருவர் பெயரை மட்டும் அந்த சிறுமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சிறப்புப்படை அந்த நபரைக் கைது செய்துள்ளது. சிசிடிவி கேமிரா காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்ததில் 5 பேரில் இதில் ஈடுபட்டுள்ளதும் அதில் 3 பேர் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. வழக்கை போக்ஸோ சட்டத்தில் மாற்றியிருக்கிறோம். விசாரணையில் அந்த சிறுமி எதையும் கூரும் நிலையில் இல்லை ” எனத் தெரிவித்தார்

சிசிடிவி காட்சிகளில் அந்தச் சிறுமி பப்பிற்கு வெளியே அந்த 5 பேருடன் நின்றுள்ளார். அவர்கள் அந்தசிறுமியை காரில் அழைத்துச் செல்லக் கோரியுள்ளனர். அந்தச் சிறுமியை காரில் அழைத்துச் சென்று, நகரின் புறநகரில் காரில் வைத்து அந்த சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி கூட்டுப்பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி பாஜகவின் நேற்று போலீஸ்நிலையம் முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் தந்தை புகாரைத் தொடர்ந்து முதலில் போலீஸார் பாலியல் தொந்தரவு பதிவு செய்திருந்தனர், ஆனால், பாஜகவினர் போராட்டத்தையடுத்து, வழக்கு பலாத்கார வழக்காக மாற்றப்பட்டது. போக்ஸோ சட்டப்பிரிவுக்கும் மாற்றப்படும் எனத் தெரிகிறது.
