17 வருடங்களுக்கு முன் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்  செய்த தவறுக்காக நேற்று திருந்தி மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

மகாராஷ்திரா மாநிலம் நாந்தேட் என்ற மாவட்டத்தின் அருகே வசித்து வந்த பிராஜி மேக்தார் கடந்த 2000-ம் ஆண்டில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீயிட்டு கொளுத்தி விட்டு  தலைமறைவானார். 

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சைகாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி ஒரு சில தினங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் கடந்த 17 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிராஜி மேக்தார், தான் செய்த தவறை எண்ணி மனம் திருந்தி மகாராஷ்டிராவில் உள்ள போகர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். 

இதனையடுத்து, அவரை வரும் 23-ம் தேதி வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.