Asianet News TamilAsianet News Tamil

கையில் துண்டிக்கப்பட்ட கணவன் தலை… போலீஸில் சரணடைந்த மனைவி… ரேணிகுண்டாவில் கொடூரம்!!

ரேணிகுண்டாவில் கணவனை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி, தலையுடன் காவல் நிலையம் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

husband killed by wife and went to the police station with head
Author
Renigunta, First Published Jan 20, 2022, 5:35 PM IST

ரேணிகுண்டாவில் கணவனை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி, தலையுடன் காவல் நிலையம் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் மற்றும் வசுந்தரா தம்பதியினர். இவர்களுக்கு 20 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை ரவிச்சந்திரன் மற்றும் வசுந்தரா இடையே தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த வசுந்தரா, தன் கணவன் என்று பாராமல் அரிவாளால் கணவனை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரின் தலையை தனியே துண்டித்த வசுந்தரா, தலையை ஒரு பையில் வைத்து, காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று, போலீஸில் சரணடைந்துள்ளார். சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

husband killed by wife and went to the police station with head

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கு ரவிச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்ததோடு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் எஸ்வி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அக்கம்பக்கத்தினர் வசுந்தராவின் மனநிலை குறித்து சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

husband killed by wife and went to the police station with head

இதை அடுத்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரேணிகுண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக மனைவிகள் கணவனைக் கொல்லும் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் ஆண்களே இப்படிப்பட்ட கொடுமைகளை செய்து வந்த நிலையில், தற்போது பெண்களும் மிக மோசமான சம்பவங்களுக்கு ஆளாகின்றனர். மனைவிகள் தங்கள் கணவனைக் கொல்லும் விதம் கவலையளிக்கிறது. பிரச்சனைகள் வந்தால் சமாளிக்க வேண்டியவர்கள், அதை செய்யாத போது கொலைகளை செய்யும் விதம் சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது. மேலும் இவ்வாறான சம்பவங்களில் தந்தை இறந்தும் தாய் சிறையிலும் இருக்கும் நிலையில் அவர்களின் மகன் அல்லது மகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios