ஒருவரின் அடையாளத்தை திருடி அதன் மூலம் மோசடி செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் தானி செயலி மூலம் நூற்றுக்கணக்கானோரின் பான்கார்டு விவரங்கள் திருடப்பட்டு, பணம் கடன் வாங்கியதாக சமீபக்கில் புகார் எழுந்துள்ளது

ஒருவரின் அடையாளத்தை திருடி அதன் மூலம் மோசடி செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் தானி செயலி மூலம் நூற்றுக்கணக்கானோரின் பான்கார்டு விவரங்கள் திருடப்பட்டு, பணம் கடன் வாங்கியதாக சமீபக்கில் புகார் எழுந்துள்ளது

வாங்காத கடனுக்கு எவ்வாறு பணம் செலுத்துவது எனப் நூற்றுக்கணக்கானோர் ட்விட்டரில் புலம்பியதைக் காண முடிந்தது. அதில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், பத்திரிகையாளர் ஆதித்யா கால்ரா உள்ளிட்டோர் தானி செயலியை(DhaniAPP) பயன்படுத்தி, தங்களைகடனாளியாக்கியுள்ளனர்.

இந்த செயலிக்குள் சென்று தங்கள் பெயர், பான்கார்டு, முகவரி ஆகியவை கடன் வாங்குவதற்காக ஒருவர் தரும்போது, அந்த விவரங்களை வைத்து வாங்காத கடனை வாங்கியதாக கணக்கில் கொள்ளப்பட்டு கடனாளியாகிறார்கள், இதுபோன்ற மோசடிதான் சமீபத்தில் நடந்தது. இந்த விவரங்களை ஹேக்கர்கள் திருடி, அதைவைத்து சிறியஅளவிலான கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்

பான் கார்டு வைத்திருந்து, தானி செயலியில் பதிவு செய்தவர்கள் பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால், அவர்கள் தங்களின் “சிபில் ஸ்கோரை” ஆய்வு செய்தபோது, தானி செயலி மூலம் அடையாளம் தெரியாத சிலருக்கு தங்களின் அனுமதி இல்லாமல், தங்களுக்குத் தெரியாமல் கடன் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கல்ரா ட்விட்டரி்ல் பதிவிட்ட கருத்தில் “ என்னுடைய கிரெடிட் அறிக்கையைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. ஐவிஎல் பைனான்ஸ் மூலம் என்னுடைய பான்கார்டை வைத்து, என்னுடைய பெயரில், முகவரியில், உ.பி., பிஹாரில் சிலருக்கு கடன் தரப்பட்டுள்ளது. எனக்கு இதுபற்றி எந்தத் தகவலும் இல்லை. என்னுடைய பெயர், பான்கார்டை வைத்து மற்றொருவருக்கு கடன் எப்படி கொடுக்க முடியும்”எ னத் தெரிவித்துள்ளார்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் கூறுகையில் “ தானி செயலி மூலம் ஒருவரின் அடையாளத்தை திருடும் மோசடி நடக்கிறது. யாரோ ஒரு முட்டாள் என்னுடைய பான்கார்டு, முகவரியைத் திருடி என்னுடைய பெயரில் ரூ2000 கடன் வாங்கியுள்ளார். என்னுடைய சிபில் ஸ்கோரை ஆய்வு செய்தபோதுதான் தெரிந்தது” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

தானி செயலிமூலம் பாதிக்கப்பட்டது குறித்து நூற்றுக்கணக்கானோர் மத்திய நிதிஅமைச்சகம், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலருக்கும் டேக் செய்து ட்விட்டரில் புகார் அனுப்பியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் எச்சரிக்கையில் “தானி செயலி மூலம் கடன் கேட்கவே இல்லை. ஆனால், எங்களுக்கு நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்து நாங்கள் கடனை செலுத்துமாறு கோருகிறார்கள். அடையாளத் திருட்டு நடந்துள்ளது” எனப்புலம்பினர். 

இது குறித்து தானி செயலி நிர்வாகம் தரப்பில் கூறுகையில் “ அனைத்துப் புகார்களையும் பெற்றுள்ளோம். இதை ஆய்வு செய்து வருகிறோம். அனைத்தும் அடையாளத் திருட்டுநடந்துள்ளது தெரிகிறது. இது தொடர்பாக சர்வதேச அளவில் பாதுகாப்பு நிறுவனத்துன் பேசி வருகிறோம். கடன் வழங்கும் முன், ஒவ்வொரு வாடிக்கையாளரின் பான்கார்டு விவரத்தை மீண்டும் ஆய்வு செய்யும் வகையில் மென்பொருளை கேட்டு வருகிறோம் ” எனத் தெரிவித்துள்ளது

தானி செயலியில் ஒருவர் தன்னுடைய பான்கார்டு,முகவரி விவரங்களை மட்டும்தந்து கடன் கோர முடியும். இதுவரை கூகுள் ப்ளேஸ்டோரில் 5 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர் ராஜசேகர் ராஜாரியா செய்தி நிறுவனத்துக்குஅளித்த பேட்டியில், “ கடந்த ஆண்டு லட்சக்கணக்கான பான்கார்டு விவரங்களை ஹேக்கர்கள் திருடினர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த விவரமும் இல்லை. அதிகாரிகளால் முறைப்படி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆதலால், நம்பகத்தன்மை இல்லாத இதுபோன்ற செயலியில் பெயர், பான்கார்டு , முகவரி விவரங்களை வழங்காமல் பாதுகாப்பக இருப்பது அவசியமாகும்.