கேரளாவில் பெய்த பேய் மழையால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியது. இதனை தொடர்ந்து, மக்கள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 380 கும் மேற்பட்ட நபர்கள் இறந்து விட்டனர். நிலசரிவில் சிக்கி  மக்கள் தவித்து வருகின்றனர். 

இந்லையில் மெல்ல  மெல்ல வெள்ளம் குறைய தொடங்கியதும்...வெள்ளம் வற்றிய  வீட்டில் ஆங்காங்கு பாம்பு  நடமாட்டம்   காணப்படுவதாக  மக்கள அச்சம் அடைந்துள்ளனர்.வீடுகளின் கழிவறைகள், அலமாரிகளில் நல்ல பாம்புகள், கட்டு விரியன்கள் சுருண்டு கிடக்கின்றன..கடந்த 5 நாட்களாக பலரும் பாம்பு கடிக்கு ஆளாகி வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதுவரை, அங்காமாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 53 பேர் பாம்பு கடிக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கேரள அரசும் பாம்பு பிடி நிபுணரான வாவா சுரேஷை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள்  செல்லும் போது கையில் சிறிய கொம்பு அல்லது குச்சிகளை வைத்துகொண்டு சென்றும், வீட்டில் உள்ள பாத்திரத்தை பல முறை செக் செய்து விட்டு பின்னர், உட்செல்வது நல்லது என்றும், இது ஒரு பக்கம் இருக்க தண்ணீரில் மண்ணெண்ணெய் கலந்து வீட்டை சுத்தம் செய்தால் உள்ளே தங்கி இருக்கும் பாம்புகள் வெளியில் சென்று விடும்..மக்கள் கொஞ்சம் நாளைக்கு மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டு உள்ளது.