புதுடெல்லி, நவ.22-

நாடுமுழுவதும் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், இந்து அமைப்பான ஆர்.எஸ். எஸ். தன்னிடம் நன்கொடையாக வந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எப்படி மாற்றும் ?என்று பிரதமர் மோடிக்கு அம்பேத்கரின் பேரனும் பாரிப் பகுஜன் மாகாசங் அமைப்பின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

டாக்டர் அம்பேத்கரின் பேரனான டாக்டர் பிரகாஷ் அம்பேத்கர், பாரிப் பகுஜன் மாஹாசங் அமைப்பின் தலைவராக உள்ளார். அவர் நேற்றுமுன்தினம் தி ஏசியன் ஏஜ் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது-

கருப்பு பணத்தின் மீது பிரதர் மோடி துல்லியத்தாக்குல்(சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்தியதாக அனைவரும் கூறுகிறார்கள்.

ஆனால், பதிவு செய்த தொண்டு நிறுவனமாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சியாகவோ அல்லது டிரஸ்ட் அமைப்பாக எதுவுமே இல்லாமல் தனது தொண்டர்களிடம் இருந்து ரூ.1000, ரூ.500 நோட்டுகளாக நன்கொடை பெறும் இந்து அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எப்படி அந்த பணத்தை மாற்றும் ?

தன்னுடைய தொண்கடர்களிடமிருந்து வசூலிக்கும், நன்கொடையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருமான வரி கணக்கில் கொண்டு வருமா ? சொல்லுங்கள் பிரதமர் மோடி.

ஆர்.எஸ். எஸ். அமைப்பு தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லை. அரசு சாரா நிறுனமாக பதிவு செய்யவில்லை. டிரஸ்ட் ஆணையரிடம் பதிவு செய்யப்பட்ட டிரஸ்ட் ஆகவும் தன்னை காட்டிக்கொள்ளவில்லை. 

அப்படியிருக்கையில் எப்படி நன்கொடை பெறுகிறது. அந்த அமைப்பின் வருவாய் என்ன. அதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? 

எனக்கு கிடைத்த தகவலின் படி, ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது தொண்டர்களிடம் இருந்து தசரா பண்டிகை மற்றும் குருபூஜை ஆகிய இரு விசேஷ நாட்களில் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கிறது.

இந்த நன்கொடை மட்டும் ஆண்டுக்கு ரூ.750 கோடியாகும். இந்த நன்கொடை, இம்மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின் எங்கு சென்றது என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்கம் அளிக்க வேண்டும் . இதற்கு பிரதமர் மோடியும் விளக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரகாஷ் அம்பேத்கருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ். கொங்கன் பிராந்த் பிராசாரக் பிரமோத் பாபத் கூறுகையில், " ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒவ்வொரு அலுவலகமும் பல்வேறு டிரஸ்ட் மூலம், பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் பெறும் ஒவ்வொரு பைசாவுக்கும் அரசுக்கு வரி செலுத்துகிறோம். குரு தட்சனைக்கும் செலுத்தும் காசுக்கு கூட வரி செலுத்துகிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் குருபூஜன் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும். அந்த நேரத்தில் தொண்டர்கள் அனைவரும், தங்களின் தகுதிக்கு ஏற்ப அமைப்பின் கொடிக்கு முன்பாக காணிக்கை செலுத்துவார்கள்.

அப்போது காணிக்கை கோடிக்கணக்கில் சேரும். 

இந்த நிகழ்ச்சியின் போது, தொண்டர்கள் தங்களின் சம்பாத்தியத்தில் 10-ல் ஒரு ப குதியை நன்கொடையாக அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

கடந்த 10 முதல் 15ஆண்டுகளாக வெளிப்படை த் தன்மை கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரூ.5 ஆயிரத்துக்கு மேல் கொண்ட நன்கொடை காசோலையாகப் பெறப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.