20 ஆண்டுகளில் அதிகரித்த மாதாந்திர வீட்டுச் செலவுகள்..!

மாதாந்திர வீட்டுச் செலவுகள் கடந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு அதிகரித்துள்ளன என்பதை தரவுகள் காட்டுகின்றன

How much monthly household expenses increased in Past two Decades data shows smp

கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் சராசரி மாதச் செலவுகள் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில் கிராமப்புற நுகர்வு அதிகரித்து, நகர்ப்புற நுகர்வுக்கும், கிராமப்புற நுகர்வுக்கும் இடையேயான இடைவெளி குறைந்துள்ளது என்பதை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2022-23இல் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு (MPCE) கிராமப்புற இந்தியாவில் ரூ.3,773 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.6,459 ஆகவும் இருந்தது. இதன் மூலம், 2011-12ல் 83.9% ஆகவும், 2009-10ல் 88.2% ஆகவும், 2004-05ல் 90.8% ஆகவும் இருந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற செலவுகளின் இடைவெளி 71.2% ஆகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி பார்த்தால், கடந்த 18 ஆண்டுகளில், கிராமப்புறங்களில் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவருகிறது.

இது நகர்ப்புறங்களை விட அதிகமாக உள்ளது. அதாவது, 2004-05இல் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவானது கிராமப்புறங்களில் ரூ.579 ஆகவும், நகர்ப்புறத்தில் ரூ.1,105 ஆகவும் இருந்தது. தற்போதைய வளர்ச்சியை பார்க்கும்போது, கிராமப்புறங்களில் 552% மற்றும் நகர்ப்புறங்களில் 484% ஆகவும் செலவு அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களின் சராசரி அதிகரித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு இடையே வீட்டு உபயோக செலவினக் கணக்கெடுப்பு (HCES) நடத்தப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, சில்லறை பணவீக்கம் மற்றும் வறுமை நிலைகள் போன்ற முக்கியமான பொருளாதார குறியீட்டின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

அதன்படி, 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிராமப்புற மக்கள்தொகையில் அடிமட்டத்தில் இருக்கும் வர்க்கத்தினரில் 5 சதவீதம் பேரின் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு ரூ.1,373 ஆகவும், நகர்ப்புறங்களில் அதே பிரிவில் ரூ.2,001 ஆகவும் உள்ளது. அதுவே, மேல்மட்ட வர்க்கத்தில் இருக்கும் 5 சதவீதம் பேரின் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு கிராமப்புறங்களில் ரூ.10,501 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.20,824 ஆகவும் உள்ளது.

கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள செலவினங்களின் ஒப்பீட்டு ஆய்வில், சிக்கிமில் மிக அதிகமாகவும் (கிராமப்புறம் ரூ.7,731, நகர்ப்புறம் ரூ.12,105) சத்தீஸ்கரில் குறைவாகவும் (கிராமப்புறம் ரூ. 2,466, நகர்ப்புறம் ரூ.4,483) உள்ளது.

சராசரி மாதாந்திர உணவு செலவுகள் ரூ.1,750 (கிராமப்புறம்), ரூ.2,530 (நகர்ப்புறம்) மற்றும் உணவு அல்லாத செலவுகள் ரூ.2,023 (கிராமப்புறம்), ரூ.3,929 (நகர்ப்புறம்) என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. 

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் குடும்ப நுகர்வு செலவின ஆய்வுகள் நடத்தப்படுகின்றன, ஆனால் தரவு சிக்கல்கள் காரணமாக 2017-18இல் தரவு வெளியிடப்படவில்லை. கடைசியாக 2011-12 ஆம் ஆண்டில் பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios