Asianet News TamilAsianet News Tamil

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கல்யாணம் செய்தும் சேர்ந்திருக்க விடமாட்டேங்குறாங்களே... கதறும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்..!

எங்கள் திருமணத்தை அங்கீகரிக்க, கோவில் நிர்வாகங்கள் மறுப்பு தெரிவித்து விட்டது. திருமணம் செய்ய விரும்பும் ஒரே பாலின தம்பதிகளின் அடிப்படை உரிமைகளை இந்த விதிமுறைகள் மீறுகிறது. 

Homosexual couples live together
Author
Kerala, First Published Jan 28, 2020, 4:11 PM IST

ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கை திருமணம் செல்லுபடியாகும் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில்  நாங்கள் இந்து திருமணம் சட்டம் படி திருமணம் செய்து கொள்வதை கோயில் நிர்வாகம் ஏற்க மறுப்பதாகவும், எங்களுக்கான உரிமையை வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் படியேறியிருக்கிறது ஒரினச் சேர்க்கை தம்பதியினர்.

Homosexual couples live together

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த நிகேஷ் உஷா புஷ்கரன் மற்றும் சோனு என்ற ஓரினச்சேர்க்கை தம்பதி தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், 1954 சிறப்பு திருமணச் சட்டத்தின் விதிகளின் படி எங்கள் திருமணத்தை அங்கீகரிக்க, கோவில் நிர்வாகங்கள் மறுப்பு தெரிவித்து விட்டது. திருமணம் செய்ய விரும்பும் ஒரே பாலின தம்பதிகளின் அடிப்படை உரிமைகளை இந்த விதிமுறைகள் மீறுகிறது. எனவே, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு, தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்திட உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Homosexual couples live together
 
இதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஓரினச்சேர்க்கை தம்பதியினரின் மனு குறித்து பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஓரின சேர்க்கை தம்பதியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

-தெ.பாலமுருகன்
 

Follow Us:
Download App:
  • android
  • ios