விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்தி நாளேடுகள், வாரப் பத்திரிகைகள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு பயணிகள் விமானப்போக்குவரத்து பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, இனிமேல், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் படிக்க ஆங்கில நாளேடுகள், பத்திரிகைகளோடு சேர்த்து, இந்தி நாளேடுகள், பத்திரிகைகளும் கண்டிப்பாக வழங்கப்படும்.

இது குறித்து பயணிகள் விமானப் போக்குவரத்தின் இணை இயக்குநர் லலித் குப்தா கூறுகையில், “ விமானத்தில் பயணிகள் படிக்க இந்தி நாளேடுகள், வாரப்பத்திரிகைகள் வழங்காமல் இருப்பு, மத்திய அரசின் அரசின் ஆதாரப்பூர்வ மொழி இந்தி என்ற கொள்கைக்கு எதிரானதாகும். இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ’’ எனத் தெரிவித்தார்.

மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரம் வௌியிடட இந்த உத்தரவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்ச்சித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும்மூத்த தலைவருமான சசி தரூர் பேசுகையில், “ மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் எக்கானமி கிளாஸ் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு சைவ உணவுதான் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இப்போது, விமான போக்குவரத்து இயக்குநரகம், இந்தியை பயணிகளை படிக்க முயலவைக்கிறது’’ எனத் தெரிவித்தார்.