ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

ஓரினச் சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் என கூறும் 377-வது சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் என கூறும் 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்பளித்த நிலையில், அதற்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ஓரினச் சேர்க்கையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய சட்டம் தற்போதைக்கு ஏற்கும் நிலையில் இல்லை என்றார். 

இந்நிலையில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் ஒரினச் செயற்கையாளர்களை குற்றவாளி என கூறும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் முடிவுக்கே விட்டுவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்துக்குள் நீதிமன்றம் சென்றால், விரிவான 2-வது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனிடையே 3-வது நாளாக 377-வது சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.