பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதனை தனி நாடாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் நித்தியானந்தா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. 

போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நித்யானந்தா, அவ்வபோது இணையதளம் வாயிலாக வீடியோ வெளியிட்டு கிச்சுக்கிச்சு காட்டி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தற்போது வெளியிட்டுள்ள பிரசங்க வீடியோ ஒன்றில், திருவனந்தபுர நித்தியானந்தா பீடத்தின் ஆதினமாக ருத்திர கன்னியான பக்தி பிரியானந்தாவை நியமித்துள்ளதாகவும், நான் இல்லை என்றாலும் என்னுடைய ஆசிரமங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. மானம், அவமானத்தை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை என கூறியுள்ளார். ஏற்கனவே காவல்துறையினர் நித்தியானந்தாவை தேடுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுபோன்ற பேச்சுக்கள் காவல்துறையினரை உசுப்பேற்றி இருக்கிறது. 

இந்நிலையில் நித்யானந்தா, இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இமயமலை பகுதியில் பேசிய நித்தியின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம்  செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.  நித்தியில் இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கைலாசா பிரதமராக பிரகடனப்படுத்தி பீலா விட்டு வந்த நித்யானந்தா இன்னும் சில தினங்களில் சிறைக்குள் களி உண்ணப்போகிறார்.