திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளதாக தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால், அன்றைய தினத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருந்தது மாநகராட்சி. இதனை தொடர்ந்து திருப்பதியிலும் தடை விதித்து உள்ளது தேவஸ்தானம் 

அதன்படி, தேநீர், காபி, பால் எடுத்துக்கொள் கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த கூடாது என்றும், இதனை தடுப்பதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் முடியும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து திருப்தியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதனையும் மீறி நாளை முதல் யாராவது பிளாஸ்டிக் பொருட்களை   விற்பது தெரிய வந்தால், அவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என  கூறப்பட்டு உள்ளது.

ஆதலால், இனி யாரும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்வது என்பது முடியாத காரியமாகும். மேலும்  திருப்பதியில் மட்டும் இல்லாமல் இதே போன்ற முறையை மக்கள் அனைவரும் ஆதரவு கொடுத்து  பின்பற்றினால் அனைவருக்கும் நல்லது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், லட்டு கவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.