நாடாளுமன்றத்தில் தாக்குதல்: கைது செய்யப்பட்டவர்கள் விவரம்!

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது

Here is the detail of  intruders in parliament who are all arrested smp

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர்  அத்துமீறி இருக்கையில் குதித்தனர். தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். அதில் இருந்து வாயு வெளிப்பட்டது.

இதையடுத்து, எம்.பி.க்கள் உதவியுடன் அவர்களை பிடித்த அவைக் காவலர்கள் அவர்களை போலீசாரிசம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் வெளியேயும் இரண்டு புகை உமிழும் கருவியை வீசினர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளே தாக்குதல் நடத்தி கைதானவர்கள் இரண்டு பேரும் ஆண்கள்; வெளியே தாக்குதல் நடத்தி கைதானவர்கள் இரண்டு பேரும் பெண்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வெளியே தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களின் பெயர் நீலம், அன்மோல்ஷிண்டே எனவும், அவர்களில் ஒருவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொருவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், மக்களவையின் உள்ளே தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரது பெயர் சாகர் ஷர்மா எனவும், மற்றொருவர் பெயர் மனோரஞ்சன் என்பதும் தெரியவந்துள்ளது. மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த மனோரஞ்சன், பொறியியல் படித்து வரும் மாணவர் ஆவார்.

நாடாளுமன்றத்திற்குள் தாக்குதல்: தீவிர விசாரணைக்கு உத்தரவு - சபாநாயகர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவைக்குள் அத்துமீறி நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மக்களவைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு-குடகு மக்களவை தொகுதி பாஜக எம்.பி.யான பிரதாப் சிம்ஹா என்பவர் கையெழுத்திட்ட நுழைவு சீட்டை (entry pass) அத்துமீறி உள்ளே நுழைந்த இருவரும் பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios