எப்படியாவது பாஸ் பண்ண வச்சிடுங்க! இல்லைனா என்ன கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க! விடைத்தாளில் கெஞ்சிய மாணவி!
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. பீகாரை பொறுத்த வரையில் 10ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு என 2 வகையான தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சி என்பது அமையும்.
எனக்கு பாஸ் மார்க் போடுங்கள் இல்லையெனில் எனது தந்தை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார் என 10ம் வகுப்பு மாணவி ஒருவர் விடைத்தாளில் எழுதியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. பீகாரை பொறுத்த வரையில் 10ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு என 2 வகையான தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சி என்பது அமையும்.
இதையும் படிங்க: சிஏஏ குடியுரிமை பெற என்னவெல்லாம் தேவை? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ..
தற்போது 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவி ஒருவர் எழுதிய விடைத்தாள் வைரலாகி வருகிறது. அதில் எனது அப்பா ஒரு விவசாயி. அவருக்கு குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது. ஆகையால் கல்விச் சுமையை அவரால் தாங்க முடியவில்லை. மேலும் அவர் என்னை படிக்க வைக்க விரும்பவில்லை. நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறி வருகிறார். அதையும் மீறி நான் படித்து வருகிறேன்.
இதையும் படிங்க: பூஜை அறை முழுவதும் எழும்புக்கூடுகள், மண்டை ஓடுகள்.. பெங்களூரு பண்னை வீட்டில் பகீர் சம்பவம்..
தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். எனக்கு நல்ல மதிப்பெண்கள் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள். நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என விடைத்தாளில் எழுதியுள்ளார். இந்த விடைத்தாளின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.