வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 7 முதல் 11 வரையிலான அடுத்த 5 நாட்களுக்கு வட மாநிலங்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 7 முதல் 11 வரையிலான அடுத்த 5 நாட்களுக்கு வட மாநிலங்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் பர்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 7 முதல் மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் செப்டம்பர் 8-ம் தேதி அருணாச்சல், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கிழக்கு ராஜஸ்தான் ஆகியவற்றில் மிக கனமழையும் என்று கூறப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 9-ம் தேதி அருணாச்சல், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகியவற்றில் மிக கனமழையும், மேற்குவங்கத்தின் இமாலய மலைப்பகுதி, சிக்கிம், உத்திரகாண்ட், கிழக்கு ராஜஸ்தானில் கனமழையும் பெய்யக் கூடும்.

மேலும் 10, 11-ம் தேதிகளில் அருணாச்சல், அசாம், மேகாலயாவில், மேற்குவங்க ஆகியவற்றில் கனமழை முதல் மிக கனமழையும், உத்தரகாண்ட், பீகார், கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். மேலும் தமிழகம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகியவற்றில் கனமழையும் பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.