மழை… மிக கன மழை.. 5  மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது.. சென்னைக்கும் செம மழை .. தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்…

இந்த ஆண்டு வழக்குத்துக்கு மாறாக தென் மேற்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டாலும் கேரள, கர்நாடக மாநிங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு மேட்டூர் அணை இந்த ஆண்டு 2 முறை நிரம்பியது

கேரளாவைப் பொறுத்த வரை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிந்து வருகிறது, மேலும் கேரள மாநிலம் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடமேற்குவங்ககடலில்புதியகாற்றழுத்ததாழ்வுப்பகுதிஉருவாகியுள்ளதுஎனவும்மீனவர்கள்யாரும்வடக்குமற்றும்மத்தியவங்கக்கடலுக்குமீன்பிடிக்கசெல்லவேண்டாம்எனவும்சென்னை வானிலைமையம்எச்சரிக்கைவிடுத்துள்ளது

இதனிடையே தமிழ்நாடுவெதர்மேன்தனதுபேஸ்புக்பக்கத்தில், இன்றும், நாளையும் சென்னையில்பலத்த மழைபெய்யவாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு நாட்களிலும் சென்னை முழுவதும் குளிர்ந்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார்..

அதே நேரத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிககனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராமநாதபுரம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.

இதே போன்று கேரளாவிலும், கர்நாடகாவிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.