வீட்டு தனிமையில் இருப்போர்களுக்கான புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரசால் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி விட்டது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் வீட்டுத்தனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் 7-வது நாளில் மறுபரிசோதனையின்றி தனிமை காலத்தை முடித்துக் கொள்ளலாம் என்பது உள்பட பல்வேறு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இருந்தால் அச்சபடவேண்டியதில்லை எனவும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே மருத்து , மாத்திரைகளை வாங்கி சாப்பிட கூடாது எனவும் வழிக்காட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய வைத்தியம் பார்ப்பதை கட்டாயம் தவீர்க்க வேண்டும் எனவும் கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர் ஆலோசனை கட்டாயம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்கு மாஸ்க் அணிந்திருக்க வேண்டுமென்றும் காற்றோட்டமுள்ள அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ள்து. மேலும் ஆக்ஸிஜன் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், வீட்டில் இருப்பவர்களிடமிருந்து தொடர்பில் இல்லாமல் பார்த்து கொள்ளுதல் உள்ளிட்டவை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வீட்டு தனிமையில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகள் தங்களது அவசர உதவிக்கு மாவட்ட கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளும் வகையில் தொடர்பு எண்ணை மக்களுக்கு தெரியப்படுத்தவும் உடனடி உதவிக்கு எந்நேரமும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் சிகிச்சையில் இருப்போரின் ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பம், அறிகுறிகளின் தீவிரம், உடல் நலம் குறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் தினமும் தொடர்புக்கொண்டு கேட்டறிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, அதிக உடல் வலி, மனநல குழப்பம், காய்ச்சல், போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு தொடர்புகொண்டு சொல்ல வேண்டும் . அதன் படி, அவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை சுகாதாரத்துறையினர் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 534 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,18,358 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,135 ஆக உயர்ந்து இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 19,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,50,18,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 534 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,82,551 பேர் உயிரிழந்துள்ளனர்.
