செல்போன் திருடிய மாற்றுத் திறனாளிக்கு அடி, உதை… போலீஸ்காரார்கள் வெறிச்செயல்…

ஒடிசாவில் உள்ள ரயில் நிலையத்தில் செல்போன் திருடியதாக கூறி மாற்றித்திறனாளியை இரண்டு போலீஸார் காலால் உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஒடிசா மாநிலத்தின் Balasore பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், பயணி ஒருவரின் செல்போன் திருடுபோனதாக புகார் கூறப்பட்டது.

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட  Balasore  ரயில்வே காவல் துறையினர் அங்கிருந்த மாற்றுத் திறனாளி ஒருவர் மீது சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அந்த மாற்றுத்திறனாளியை 2 ரயில்வே போலீசார் சரமாரியாக அடித்து உதைத்தனர்,

மேலும் தரையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளியை தங்களது கால்களால் இழுத்து உதைத்தனர். வலி தாங்காமல் அவர் அலறித் துடித்தார். அவரை போஸீசார் அடித்து உதைத்த போது அங்கிருந்த யாருடம அவர்களைத் தடுக்கவில்லை.

மனித உரிமையை மீறிய இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.