36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்..! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் 'எல்விஎம்-3' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புவி சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

GSLV MK III rocket successfully launched

விண்ணில் பாய்ந்த ராக்கெட்

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’கருதப்படுகிறது. இஸ்ரோ ஏவிய ராக்கெட்டுகளிலேயே  இந்த ராக்கெட் மிகப்பெரியதாகும். இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் எடை கொண்டவை. இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளம் கொண்டது, ஏறக்குறைய 8டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இஸ்ரோ வர்த்தகரீதியான சேவையை அதாவது,வர்த்தகரீதியாக செயற்கைக்கோள்களை ஏவும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. 

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.. அக்.24 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் - வானிலை

GSLV MK III rocket successfully launched

புவி வட்ட பாதையில் நிறுத்தப்பட்டது

இதில்  இ ங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் one web நெட்ஒர்க் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 சாட்டிலைட்களை ஜிஎஸ்எல்வி சுமந்து சென்றது. முழுமையாக, வெளிசெயற்கைக்கோள்களுக்கு மட்டும் ஒரு ராக்கெட்டை வடிவமைத்து முழுமையாக வர்த்தகச் செயல்பட்டை தொடங்குவது இதுதான் முதல்முறையாகும். நள்ளிரவு 12.07 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. குறைந்த உயர புவி சுற்று வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டது. தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக ஏவப்பட்டது

இதையும் படியுங்கள்
சென்னையில் பிடிபட்ட 2.60 கோடி மதிப்பிலான தங்கம்.. விமான நிலையத்தில் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios