GSLV Mac 3 rockert countown starts
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் , ஜிசாட்-19 என்ற செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கியது.
ஜி.எல்.வி. ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.பி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இது இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது. அதாவது 640 டன் எடையுள்ளது. ஏற்கனவே இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
விண்ணில் செலுத்தப்படுகிறது
இந்த நிலையில் நாளை (5-ந்தேதி) மாலை 5.28 மணிக்கு 7-வது முறையாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த ராக்கெட் மூலம் 3 ஆயிரத்து 136 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது.
உள்நாட்டு தொழில்நுட்பம்
640 டன் எடையுள்ள இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட்டில் அதிநுட்பம் வாய்ந்த சிஇ-20 க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த க்ரையோஜெனிக் என்ஜினில் ஹைட்ரஜன் ஆக்சிஜனுக்கு தனித் தனி டர்பைன்களும் பொருத்தப்பட்டுள்ளது. 20 டன் உந்து சக்தி கொண்டுள்ள இந்த க்ரையோஜெனிக் இன்ஜினால் 4 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும்.
. இதுவரை தனது அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்தியா பிரான்ஸ் நாட்டையே சார்ந்திருந்தது. இனி இந்தியாவால் இதனை சுயமாகவே சாதித்து கொள்ள இயலும். மேலும் வெளி நாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வணிக இலாபமும் ஈட்ட முடியும்.
